Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்ஐசி பங்குகள் விற்கபடுவது ஏன்? நிர்மலா சீதாராமனின் அடடே விளக்கம்!!

எல்ஐசி பங்குகள் விற்கபடுவது ஏன்? நிர்மலா சீதாராமனின் அடடே விளக்கம்!!
, சனி, 8 பிப்ரவரி 2020 (17:59 IST)
பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எல்ஐசியின் பங்குகளை விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும் வெளியிட்டார். அதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டமும் அடக்கம். 
 
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசின் நிறுவனம் என்பதாலேயே பலர் எல்.ஐ.சியில் காப்பீடு எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் கூறியதாவது, பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என கூறினார். 
 
மேலும், பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் எத்தனை சதவிகித பங்குகள் விற்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி உண்மை பேசுவதால் விமர்சிக்கிறார்கள் - பொன்.ராதா கிருஷ்ணன்