Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் வீடுகள்" அதலபாதாளத்தில் ரியல் எஸ்டேட் துறை

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் வீடுகள்
, வியாழன், 14 மே 2020 (08:37 IST)
real estate
சென்னை உள்பட பெருநகரங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் துறை ஜோராக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வீடுகளின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரியல் எஸ்டேட் துறை அதள பாதாளத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது 
 
பொதுமக்களிடம் கையில் காசு இல்லாததால் சொந்த வீடுகளை விற்க பலர் முயன்று வருவதாகவும் ஆனால் இந்த அவசரத்தை பயன்படுத்திய ரியல் எஸ்டேட் துறையினர் வீடுகளை 20 முதல் 40 சதவீதம் குறைத்து கேட்பதாகவும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிலர் வீடுகளை விற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் 20% முதல் 40 சதவீதத்தை குறைத்து வாங்கிய வீடுகளை கூட விற்க முடியாமல் ரியல் எஸ்டேட் துறையினர் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது வீடு வாங்கும் திறன் கொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தற்போது பொதுமக்கள் யாரிடமும் காசு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
எனவே வீடுகளை அடிமாட்டு விலைக்கு விற்பது, புதிதாக வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருவது ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் துறை அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை டூ டெல்லி சிறப்பு ரயில்: ஆரோக்ய சேது இல்லைனா அனுமதி இல்ல!