Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (11:26 IST)
ஐபிஎல் கோப்பையை வென்ற  ஆர்சிபி அணி, பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்திற்காக போலீஸ் இடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் பெங்களூரில் ஏற்கனவே டிராபிக் பிரச்சனை அதிகமாக இருப்பதால், வெற்றி கொண்டாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
போக்குவரத்து நெரிசலான நகரில் இந்த கொண்டாட்டம் தேவையில்லை என போலீசார் கூறிய நிலையில், ஆர்சிபி பிடிவாதமாக சில பிரபலங்களை பிடித்து இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
 
மாநில அரசு நினைத்திருந்தால் இந்த கொண்டாட்டத்தை நிறுத்தியிருக்கலாம் என்றும், ஆனால் இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்த மாநில அரசே 11 உயிர்கள் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அகமதாபாத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற இரவு அன்று கொண்டாட்டம் நடந்து விட்டது. அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பெங்களூரில் கொண்டாட்டம் வைத்திருக்கலாம்.
 
அவசர அவசரமாக பெங்களூர் வந்து இறங்கிய 4 மணி நேரத்தில் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவைதானா என்று பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
மொத்தத்தில், இந்த அசம்பாவிதத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகமும் மாநில அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவிப்பு கூட வெளியிடாமல் திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

டெல்லி ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: தமிழக அரசியலில் பரபரப்பு

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு: முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.. ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments