Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? ஆர்பிஐ கூறுவது என்ன?

14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? ஆர்பிஐ கூறுவது என்ன?
, புதன், 17 ஜனவரி 2018 (18:41 IST)
புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறப்படுவதாக வரும் தொடர் புகார்களை தொடர்ந்து ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் கவலைப்பட வேண்டாம். இதுவரை வெளியிடப்பட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கது.
 
இந்த 14 விதமான நாணயங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மதிப்புகள் என பல்வேறு கருப்பொருள்கள் பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
 
மேலும் 10 ரூபாய் நாணயங்களை பண பரிவர்த்தனை மற்றும் பண மாற்றத்துக்கு ஏற்றுகொள்ள வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
 
14 வகையான 10 ரூபாய் நாணயங்கள்:
 
# ஸ்ரீமதி ராஜ்சந்திரா வின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அச்சிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# தேசிய ஆவணக் காப்பக கட்டடம் கட்டி 125 ஆண்டுகள் நினைவை ஓட்டி வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# ஸ்வாமி சின்மயானந்தாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்ட்ட 10 ரூபாய் நாணயம்.
# பி.ஆர். அம்பேத்கார் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு அச்சிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# மகாத்மா காந்தி ஆப்ரிக்காவில் இருந்து வந்து 100 ஆண்டுகள் ஆனதன் நினைவாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# கயிறு வாரியத்தின் வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்
# பாராளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நினைவாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# நாணயத்தின் வெளிப்புறம் 10 எண்கள் மற்றும் ரூபாய் சின்னம் உடைய 10 ரூபாய் நாணயம்..
# ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய சில்வர் ஜூபிலியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# ரிசர்வ் வங்கியின் 75 ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம்.
# ஹோமி பாபா பிறந்த நூற்றாண்டு ஆண்டு விழாவில் வெளியிடப்பட 10 ரூபாய் நாணயம். 
# பன்முகத்தன்மை ஒற்றுமை என்ற பகட்டான பிரதிநிதித்துவம் காட்டும் 10 ரூபாய் நாணயம்.
# 2009-ல் வெளியான முதல் இரு உலோக 10 ரூபாய் நாணயம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் - போட்டு உடைத்த திவாகரன்