Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (10:15 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடாகாவில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மகாராஷ்டிராவில் ஜிபிஎஸ் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  வயிற்றுப்போக்கு, சுவாச நோய் தொற்று ஆகிய பாதிப்புகளால் அவதிப்படுவதாகவும், சிலருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறிய போது, “ஜிபிஎஸ் நோய் குறித்து கவலை வேண்டாம். அதை சமாளிக்க என் துறை முழுமையாக தயாராக உள்ளது. ஜிபிஎஸ் நோய் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தாக்கும்,” என்று கூறினார்.

மேலும், இரண்டு கர்நாடகா கிராமங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், ஜிபிஎஸ் நோய் அறிகுறி இருந்தால், உடனடியாக அந்த 2  கிராமத்தில் உள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

அடுத்த கட்டுரையில்
Show comments