Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி பேச்சால் கடுப்பான சாவர்க்கர் பேரன்!

Advertiesment
ராகுல் காந்தி பேச்சால் கடுப்பான சாவர்க்கர் பேரன்!
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (13:23 IST)
வீர சாவர்க்கரை கேலி செய்யும் தோனியில் ராகுல்காந்தி பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாவர்க்கரின் பேரன் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் குளிர்கால கூட்ட தொடரில் பேசிய ராகுல் காந்தி மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ‘ரேப் இன் இந்தியா’ என்று விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக பெண் எம்.பிக்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. உண்மையை சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என கூறினார். தனது பேச்சில் வீர சாவர்க்கரை கேலி செய்து ராகுல் காந்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் ராகுல் காந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடனாளி விவசாயியை கோடீஸ்வரனாக்கிய வெங்காயம்!