அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில் இந்த சிலையில் திருமாலின் 10 அவதாரங்கள் மற்றும் அனுமன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை ராமர் சிலையின் கீழ்ப்பக்கம் அனுமன் மற்றும் கருடன் ஆகியோர் உள்ளனர். இதனை அடுத்து மச்ச அவதாரம், கூர்மா அவதாரம்,வராக அவதாரம், நரசிங்க அவதாரம், வாமன அவதாரம் மற்றும் பரசுராமன் அவதாரம், ஸ்ரீராம அவதாரம், கண்ணன் அவதாரம், புத்தன் அவதாரம் மற்றும் கல்கி அவதாரம் என 10 அவதாரங்கள் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பிரம்மன், ருத்திரன், சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம் ஆகியவையும் இந்த சிலையை சுற்றி வலைய வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலை ஆச்சாரபூர்வமாக மிகவும் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இந்த சிலை பிரதிஷ்கப்பட உள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த குழந்தை ராமரை தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.