Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரலான புகைப்படம் : மோடி படத்தில் ஹீரோவான ராமச்சந்திரன்

Advertiesment
வைரலான புகைப்படம் : மோடி படத்தில் ஹீரோவான ராமச்சந்திரன்
, வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (09:11 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள சினிமாவில் அவரைப்போலவே தோற்றம் உடைய ராமச்சந்திரன் மோடி வேடத்தில் நடித்துள்ளார்.

 
கடந்த ஆண்டு கேரளாவின் பையனூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனின் புகைப்படம் வைரலாக பரவியது. ஏனெனில், அவர் பார்ப்பதற்கு அச்சு அசல் மோடியை போலவே தோற்றமளித்தார். அவரது புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மோடி பற்றிய மீம்ஸ்களிலும் இவர் இடம் பெற்றார். செல்லுமிடமெங்கும் அவரை சூழ்ந்த மக்கள் அவருடன் செல்பி எடுத்தனர்.
 
இந்நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் கன்னட மொழி படத்தில் ராமச்சந்திரன் மோடியின் வேடத்தில் நடித்துள்ளார். மோடி அறிவித்த பண் மதிப்பிழப்பு திட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படத்திற்கு 8/11 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் இப்படம் வெளியாகிறது. 
 
செல்லுமிடமெங்கும் மக்கள் செல்பி எடுக்க வருவதால், ராமச்சந்திரன் தன்னுடையை தாடியை எடுத்துவிட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்ப்யூட்டர் வெடித்ததில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாப பலி