Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயோத்தில் வெற்றியை கொடுக்காத ராமர் கோவில்.! தகர்ந்தது பாஜகவின் கனவு.!!

BJP Ayoothi

Senthil Velan

, செவ்வாய், 4 ஜூன் 2024 (22:15 IST)
உத்தரதேச மாநிலம் அயோத்தி தொகுதிக்குட்பட்ட பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அயோத்தி தொகுதியில் பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது.
 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமர் கோவில் கட்டப்பட்டதால், உத்திரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என பாஜக வியூகம் வகுத்திருந்தது. 


ஆனால் அயோத்தி தொகுதிக்குட்பட்ட பைஸாபாத்தில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். இது பாஜகவிற்கு பெரும் இடியாக விழுந்துள்ளது. இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..! ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை..!!