'மாநிலங்களவையில் கடும் அமளி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:47 IST)
பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடிய நிலையில் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை கூடியது. மக்களவையில் இன்று மூன்று வேளாண்மை சட்ட திருத்தங்களும் வாபஸ் பெறக் கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த மசோதா மீது விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் எம்பிக்கள் ஈடுபட்டதை அடுத்து அமளியில் ஈடுபட்ட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments