Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல பேருடன் உறவு : பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் : வீடியோ

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்

Advertiesment
பல பேருடன் உறவு : பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் : வீடியோ
, புதன், 17 ஆகஸ்ட் 2016 (16:16 IST)
பல ஆண்களுடன் உறவு வைத்திருந்தார் எனக்கூறி, ஒரு பெண்ணின் முடியை வெட்டி, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அம்பேத்கார் கான்சி எனும் கிராமம்.  அங்கு வசிக்கும் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் அந்த கிராமத்தை சேர்ந்த பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுவதை கண்ட அண்டை வீட்டுக்காரர், இதுபற்றி அந்த கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தார்.
 
இந்த பெண்ணால் அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று புகார் கூறிய, அந்த கிராமத்து பெண்கள், சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலைமுடையை வெட்டினர். 
 
அதோடு விடாமல், அவரின் ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரை அடித்து உதைத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டுள்ளனர். 
 
மேலும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
 

Thanks -  India Today

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து பெண்கள் உட்பட 6 பேரை கொலை செய்த மருத்துவர்!