Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் மாடுகளை அழைத்துச் சென்ற போலீஸார்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (16:17 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸார் உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் மாடுகளுக்கு உதவி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ராஜஸ்தான் மாநிலம் மேகாத் மாவட்டத்தில் உள்ள கோல்கோவான் பகுதியைச் சேர்ந்த அக்பர் கான்(31) தனது நண்பருடன் பசுமாடுகளை ஹரியானாவுக்கு கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியில் லலாவண்டு கிராம பகுதியில் ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளது.
 
இந்த தாக்குதலில் அக்பர் கான் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பர் கானை மீட்காமல் முதலில் மாடுகளை உரிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
பின்னரே அக்பர் கானை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பசு காவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம்கள் மீது சில அமைப்பினர் கொலை வெறி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
 
பசு காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. சமீபத்தில் பசு காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் தாக்குதலுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு. இதற்கும் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பற்ற முறையின் பதிலளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments