Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிவாரி கணக்கெடுப்பு.. ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தான் காங் தேர்தல் அறிக்கை..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (15:37 IST)
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வட்டி இல்லாமல் 2 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு கடன் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாத இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக நேருக்கு நேர் மோதுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் சற்றுமுன் தனது வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் இலவச சமையல் வாயு சிலிண்டர், சாதி வாரி கணக்கெடுப்பு, நான்கு லட்சம் அரசு வேலைகள், 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்புகள் என தெரிவித்துள்ளது.

மேலும்  மாட்டுச் சாணம் கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்தல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், குடும்ப தலைவருக்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய்,  கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments