மனைவி மற்றும் 3 குழந்தைகள்.. ராஜஸ்தான் தொழிலதிபரின் குடும்பமே பலி.. சொந்த ஊரில் சோகம்..!

Siva
வெள்ளி, 13 ஜூன் 2025 (09:01 IST)
நேற்று நிகழ்ந்த கோர விபத்தில், ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் குடும்பமே பலியாகி உள்ளது. இது அவரது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானை சேர்ந்த பிரதீக் ஜோஷி என்பவர் தொழிலதிபராக இருந்தார். அவருக்கு கோமி வ்யாஸ் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருந்தனர். கோமி வ்யாஸ் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தனது குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக பிரதீக் லண்டனைத் தேர்வு செய்து விமானத்தில் பயணம் செய்தபோதுதான், அவரும், அவரது மனைவியும், குழந்தைகளும் என ஒட்டுமொத்த குடும்பமும் இந்த விமான விபத்தில் பலியானது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, பிரதீக் ஜோஷியின் சொந்த நகரம் துக்கத்தில் மூழ்கியுள்ளது. பிரதீக் ஜோஷியும் அவருடைய மனைவியும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்றும், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை விரும்பியவர்கள் என்றும் அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நகரத்தின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments