Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா தொகுதி விவரங்கள் !

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (07:56 IST)
வரிசையாக நடத்தப்பட்டு வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இன்று ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

தெலங்கானா ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது முறையாக தேர்தலை சந்திக்கிறது. இன்று நடைபெறும் தேர்தலுக்காக தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் முதல் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரை அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதை அடுத்து இன்று வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

தெலங்கானா மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். அவற்றில் கலவரம் நடக்க சாத்தியமுள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் மற்ற தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலங்கானாவில் வாக்குரிமைப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 2.81 கோடியாகும்

ராஜஸ்தான் மாநிலம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. அவற்றில் 199 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4.78 கோடி பேர் வாக்களிக்க இருக்கும் இத்தேர்தலுக்கான காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இரண்டு மாநிலத் தேர்தலுக்கான முடுவுகளும் டிசம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments