ராஜஸ்தானில் 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

சனி, 9 நவம்பர் 2019 (11:37 IST)
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் நிலம் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை அதிகரித்துள்ளது.

பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜஸ்தானில் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அயோத்தியில் ராமர் கோவில்: ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு!!