Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி: ராஜஸ்தானில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:39 IST)
2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி: ராஜஸ்தானில் பரபரப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று இன்று பிறந்துள்ள்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அவ்வப்போது பசுமாடு வித்தியாசமான கன்று குட்டிகளை ஈன்று வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த பசு சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. இந்த நிலையில் அந்த பசுவுக்கு இன்று கன்று குட்டி பிறந்த நிலையில் அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கூடிய அதிசய கன்றுக்குட்டி ஆக இருப்பதை பார்த்து விவசாய ஆச்சரியமடைந்தார் 
 
இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியவுடன் ஏராளமானோர் அந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியபோது இரண்டு தலை நான்கு கண்களுடன் உள்ள கன்று குட்டி தற்போது வரை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments