Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமனின் புறநானூறுக்கு திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்த திமுக எம்பி!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (10:10 IST)
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது புறநானூறு பாடல் ஒன்றை பாடி, அதன் விளக்கத்தை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் விளக்கி, அதனோடு பட்ஜெட்டில் போடப்பட்டுள்ள வரியையும் ஒப்பீடு செய்தார். அவருடைய இந்த உதாரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழில் இவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கின்றதா? என உறுப்பினர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
 
இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா பாராளுமன்றத்தில் பேசியபோது, ஒரு திருக்குறளை குறிப்பிட்டு பட்ஜெட்டை குறை கூறினார். அவர் கூறிய திருக்குறள் இதுதான்:
 
ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு
என்ற திருக்குறளை சுட்டிக்காட்டிய ஆ.ராசா அதன் பொருளை கூறியபோது, உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும் என்றும், ஆனால் என்னைப் பொருத்தவரை, இந்த நான்கு அம்சங்களில் இந்த பட்ஜெட் முற்றிலும் தோல்வியுற்றுவிட்டது என்றும் கூறினார். 
 
புறநானூறுக்கு பதிலடியாக ஆ.ராசா இந்த திருக்குறளை கூறினாலும், புறநானூறை நிர்மலா அருமையாக விளக்கியது போல் ஆ.ராசா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments