Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பெங்களூரில் மழை.. இந்தியா-நியூசிலாந்து போட்டி நிறுத்தம்..! ஆனால்..

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (11:14 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்க வேண்டிய நிலையில் நேற்றைய நாள் முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று டாஸ் போடப்பட்டு, டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்த நிலையில் 13 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இன்று காலை 10 மணி அளவில் ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் வரை இந்திய அணி 14 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் ஏழு ரன்கள் எடுத்துள்ள நிலையில் சர்பராஸ் கான் இன்னும் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஐந்து நாளில் ஒரு நாள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையா? இதோ முழு விவரங்கள்..!

முக்கிய நகரங்களில் மீண்டும் ஏர்டெல் சேவை முடக்கம்; வாடிக்கையாளர்கள் அவதி

பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்.. அதிர்ச்சி தகவல்..!

எல்லை தாண்டி மீன்பிடித்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் விருதுகள் அறிவிப்பு.. கனிமொழிக்கு என்ன விருது?

அடுத்த கட்டுரையில்
Show comments