Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் கொண்டு செல்ல “ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்” சிறப்பு ரயில்கள்! – ரயில்வே நடவடிக்கை!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:34 IST)
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல பசுமை வழிதடத்தில் “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜனை கால தாமதமின்றி கொண்டு சேர்க்க முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments