Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக ரயிலை நிறுத்தும் டிரைவர்! – வீடியோ வைரலானதால் நடவடிக்கை!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (11:45 IST)
ராஜஸ்தானில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக ரயிலை குறிப்பிட்ட இடத்தில் தினமும் நிறுத்தும் டிரைவர் மீது ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் வந்து செல்லும் ஜெய்ப்பூர் – அல்வர் எக்ஸ்பிரஸ் தினம்தோறும் காலை 9 மணிக்கு டவுட்பூர் பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங்கை தாண்டி செல்கிறது. அந்த சமயம் கேட் மூடப்படும் நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாண்டி சென்றதும் 5 நிமிடத்தில் போக்குவரத்து சீராகும்.

ஆனால் அல்வர் எக்ஸ்பிரஸை இயக்கி வரும் டிரைவர் தினமும் இந்த ரயில்வே கேட் பகுதி வந்ததும் ரயிலை நிறுத்தி விட்டு சென்று அவருக்கு பிடித்த “கச்சோரி” என்ற தின்பண்டத்தை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதை ஒருவர் சமீபத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் ரயில் ஓட்டுனர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியால் அழுத குழந்தைகள்.. துள்ளத் துடிக்க கொன்ற கொடூர தாய்!

நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி.! முடங்கிய நாடாளுமன்றம்..!!

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..! விஜயை புகழ்ந்து தள்ளிய சீமான்..!

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments