Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு ? – பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்ளும் வாரியம் !

ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு ? – பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்ளும் வாரியம் !
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (08:08 IST)
ரயில்வேத் துறையின் நடைமுறையில் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் குறித்த பகுப்பாய்வு நடைபெற்று வருவதாக ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை இந்த ஆண்டின் இறுதிக்குள்  20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெறுவதாக ரயில்வே வாரியத் துறை தலைவர் வி கே யாதவ் நேற்றுதெரிவித்திருந்தார். ஆனால் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து அவர் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. கட்டண உயர்வு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போதைய நிலவரப்படி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு விதத்தில் 6.6 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரயில்வே துறையின் உள்ளிட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்ட கட்டண உயர்வு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பமான பெண்ணின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை – உறவினர்கள் செய்த கொடூரம் !