2016-17 மத்திய ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் அறிவித்த சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
பத்திரிகையாளர்கள் சலுகை விலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி.
மூத்த குடிமக்களுக்கான கீழ் படுக்கை எண்ணிக்கை உயர்த்தப்படும்.
ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
பெங்களூரில் புறநகர் ரயில் வசதி மாநில அரசின் பங்களிப்போடு ஏற்படுத்தப்படும்.
புறநகர் வழித்தடத்தை மேம்படுத்த தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா மாநிலங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரேஷ் பிரபு தெரிவித்தார்.