நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். அதில் சிறப்பு அம்சங்கள்
* இந்தியாவிலேயே சென்னையில் முதன்முறையாக ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.
* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு ரயில்பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
*இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில் வாகன மையம் சென்னையில் அமைக்கப்படும்.
*ரயில் பாதையை ஒட்டியுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்கள் வணிக ரீதியில் பயண்படுத்தப்படும்.
* பின்தங்கிய பகுதிகளில் ரயில்வே திட்டங்களை கண்கானிக்க ஆளில்லா விமானம் பயண்படுத்தப்படும்.
* விபத்துக்களை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.
* ரயில்வே துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.