Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்.. ராகுல் ஆவேசம்

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்.. ராகுல் ஆவேசம்

Arun Prasath

, வியாழன், 28 நவம்பர் 2019 (12:20 IST)
நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக எம்.பி. பிரக்யாசிங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி “நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க நாள்” என கூறியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா சிங், “நாதுராம் கோட்ஷே ஒரு தேச பக்தர்” என கூறினார். இதனை தொடர்ந்து அவரின் பேச்சுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து பிரக்யா சிங் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேச பக்தர் என் கூறுகிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இது ஒரு துக்ககரமான நாள்” என கூறியுள்ளார்.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா சிங் முன்னதாக பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைக்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கொள்ளையர்கள்..!!