எல்லையில் சீனாவை விட இந்திய ராணுவமே அதிகமாக அத்துமீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது என்பதும் இரு நாட்டு ராணுவமும் குறிப்பாக சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி கிராமங்களை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் விகே சிங் அவர்கள் எல்லைப்பகுதியில் சீனாவை விட இந்திய ராணுவமே அதிகம் அத்துமீறி இருப்பதாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இதனையடுத்து மத்திய இணை அமைச்சர் விகே சிங் அவர்களை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து அவர் கூறியபோது மத்திய அமைச்சர் ஒருவரே சீனாவை விட இந்திய ராணுவம் தான் அதிகமாக அத்துமீறியதாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்