Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சிதம்பரத்தை சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கை…” ராகுல் குற்றச்சாட்டு

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (16:39 IST)
ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயாலும் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு பல முறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செயதார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனிடையே சமீபத்தில் சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற மனுத் தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இதை தொடர்ந்து இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து தற்போது விடுதலையாகியுள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரத்திற்கு அனுமதியின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செய்லாளர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில், ”106 நாள் ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் செயலாகும். உச்சநீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் நிரபராதி என்பதை அவரே நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments