Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு போக மிச்சம் இருந்தா குடுங்க! – ராகுல் காந்தி ட்வீட்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:12 IST)
அமெரிக்க அதிபரின் வேண்டுகோளை தொடர்ந்து அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்ப இந்தியா அனுமதித்துள்ளது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகளவில் அதிகளவில் ஹைட்ராக்ஸிக்ளொரோகுயின் தயாரிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மருந்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் இந்தியாவின் சூழலை கருத்தில் கொண்டு மலேரியா மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எச்சரித்துள்ள ட்ரம்ப் ”ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ”நட்பு என்பது பதிலடி பொறுத்து அல்ல. இந்தியா கண்டிப்பாக அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும். மருந்துகளை அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அது இந்தியர்களுக்கு தேவையான அளவிற்கு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments