Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்துல யாருக்குமே பயப்பட மாட்டேன்! – டைமிங்கில் ட்வீட் போட்ட ராகுல் காந்தி!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (08:49 IST)
உத்தர பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பார்க்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லையில் தடுக்கப்பட்டும் மீறி ராகுல் காந்தி செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையின் துணையுடன் வெல்வேன். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும். காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்”

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்