தலைவரே வந்து ஒரு டைவ் போடுங்க! நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி! – வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:52 IST)
கேரள மீனவர்களோடு மீன்பிடிக்க சென்ற ராகுல்காந்தி நடுக்கடலில் டைவ் அடித்த வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தமிழகம் வந்த ராகுல்காந்தி சமையல் கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து உணவருந்தியது வைரலானது.

இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார் ராகுல்காந்தி. அங்கு கொல்லம்வாடி துறைமுகத்தில் இருந்து மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற அவர், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க உதவிகள் செய்தார்.

பின்னர் மீனவர்களோடு சேர்ந்து நடுக்கடலில் குதித்து நீந்திய ராகுல் காந்தி கரை திரும்பியதும் மீனவ மக்களிடையே பேசினார். இந்நிலையில் ராகுல்காந்தி கடலில் குதித்த வீடியோவை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments