பாஜக வெற்றி பெற்றால் அதானிக்கு தான் வளர்ச்சி கிட்டும்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (17:03 IST)
பாஜக வெற்றி பெற்றால் அதானி ஒருவருக்கு தான் வளர்ச்சி கட்டும் என்றும் பொதுமக்களுக்கு வளர்ச்சி கிடைக்காது என்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியுள்ளார். 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி ’காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்றும் அதானி வளர்ச்சிக்கு மட்டுமே பாஜகவின் திட்டங்கள் இருக்கும் என்றும் ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது என்றும் கூறினார். 
 
 காங்கிரஸ் அரசு ஏழைகளை பாதுகாத்து வருகிறது என்றும் ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்கள் அழிந்தன என்றும் விமான நிலையம், துறைமுகம், சிமெண்ட் நிறுவனங்கள் எல்லாம் அதானி கைக்கு சென்று விட்டது என்றும் எனவே பாஜகவை வெற்றி பெறச் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments