Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை குறைஞ்சாச்சு! பெட்ரோல் விலை எப்போ?- ராகுல் காந்தி கேள்வி

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (10:55 IST)
உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்காதது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் அன்றாட விலைக்கே விற்பனையாகி வருகிறது.

இதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இன்னமும் குறைக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த பேரிடர் காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது விவசாய பொருட்களை கொண்டு செல்வோர், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்மையை தரும் என காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments