Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாதங்களில் ரூ.46.5 லட்சம் பங்குச்சந்தையில் லாபம் பார்த்த ராகுல் காந்தி.. பரபரப்பு தகவல்..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:31 IST)
இந்தியா பங்குச்சந்தை குறித்தும் செபி குறித்தும் குறை கூறிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 46 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதானி நிறுவனத்தின் மீது செபி தலைவர் மாதபி புச் என்பவர் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார்.
 
குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றும் அந்த பணத்திற்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் மோடி அரசில்தான்   பங்கு சந்தை குறித்து குறை கூறி வரும் ராகுல் காந்தி அதே பங்குச்சந்தையில் கடந்த ஐந்து மாதங்களில் 46.5 லட்சம் ரூபாய் லாபம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
 
ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்போசிஸ், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களில் ராகுல் காந்தி   4 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்திருப்பதாகவும் அவர் முதலீடு செய்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 4 கோடியே 80 லட்சம் அளவில் இருப்பதாகவும் இதனால் அவருக்கு 46 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments