செல்போனில் பேசிக்கொண்டே ஹீட்டரைப் பயன்படுத்திய நபர். நடந்த விபரீதம்..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:23 IST)
செல்போனில் பேசிக்கொண்டே ஹீட்டரை பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மகேஷ் பாபு என்ற நபர் நேற்று தனது நாயை குளிப்பாட்டுவதற்காக ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைக்க முயன்றார். அப்போது மகேஷ் பாபுவுக்கு செல்போன் அழைப்பு வந்த நிலையில் ஒரு கையில் செல்போனை பேசிக்கொண்டே இன்னொரு கையில் ஹீட்டரை பயன்படுத்தினார்.

அப்போது மகேஷ்பாபு தவறுதலாக தண்ணீரில் கையை வைத்து விட்டார். இதனை அடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் மகேஷ் பாபு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து அவருடைய மனைவி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை பயன்படுத்திக் கொண்டே தவறுதலாக ஹீட்டரை தொடுவதற்கு பதிலாக தண்ணீரை தொட்டுவிட்டதால் பரிதாபமாக உயிர் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments