Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்கொடுமை செய்து சிறுமி கொலை; பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்காந்தி!

Advertiesment
வன்கொடுமை செய்து சிறுமி கொலை; பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்காந்தி!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:36 IST)
டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.

டெல்லி மாநிலம் பழைய நங்கால் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து பேசியுள்ள அவர் “பெற்றோரின் கண்ணீர் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறது- அவரது மகள், நாட்டின் மகள். இந்த நீதியின் பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!