Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ராகுல் திடீர் ஆலோசனை – அதிமுக & பாஜக பேச்சுவார்த்தை எதிரொலி !

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:47 IST)
இன்று பாஜக தமிழகத்தில் தனது கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்து வரும் சூழலில் டெல்லியில் ராகுல் காந்தி திடீரென கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அதிமுக பாமக இடையிலான கூட்டணி இன்று காலை உறுதியானது. அதையடுத்து பாஜக அமைச்சர் பியுஷ் கோயல் இன்று சென்னை வந்து தேமுதிக மற்றும் தேமுதிக உடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பாகவே திமுக உடனானக் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பாஜகவின் இந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளோடு திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக திமுக வுடனான கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனைத் தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments