Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காவலாளி ஒரு திருடர்’ – உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் !

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (16:03 IST)
ரஃபெல் வழக்கு தொடர்பான தீர்ப்பை தனக்கு ஏற்றார்போல திரித்துக் கூறியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி மீதும் பாஜக மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடு நடக்கவில்லை என, தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக அலுவலகத்தில் இருந்து திருடி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற குற்றாச்சாட்டை முன்வைத்து நீதிமன்றம் இந்த ஆவணங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிமன்றம் ஆவணங்களை ஆதரங்களாக எடுத்துக்கொள்ளலாம் எனவும், ரபேல் ஊழல் வழக்கின் ஆவணங்கள் மீது விசாரணை விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தது.

இதுகுறித்து அப்போது பிரச்சாரத்தில் இருந்த ராகுலிடம் கேள்வி எழுப்பியபோது ‘காவலாளி ஒரு திருடன் என நீதிமன்றமே சொல்லிவிட்டது’ எனக் கூறினார். இதையடுத்து நீதிமன்றத் தீர்ப்பில் அதுபோல எதுவும் இல்லை எனவும் தீர்ப்பை ராகுல் தனக்கு ஏற்றவாறு திரித்துக்கூறியுள்ளார் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று விசாரித்த நீதிபதிகள் 22 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இதுகுறித்து இன்று ராகுலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘ரஃபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என விளக்கம் அளித்துள்ளார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments