அமேதி , ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டியா?

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (10:46 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் ரேபேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வரும் நிலையில் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments