Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாத்தாளை கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்! மசோதா நிறைவேற்றம்..!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (09:30 IST)
வினாத்தாளை கசிய விட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் என பீகார் மாநில சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே வினாத்தாள் கசிவு என்ற முறைகேடு அதிகரித்து வருகிறது என்பதும் நீட் தேர்வு மட்டும் இன்றி மற்ற தேர்வுகளிலும் வினாத்தாள் கசிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெக்னாலஜி முன்னேற்றம் காரணமாக வினாத்தாள் கசிவு என்பது மிக எளிதில் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் வினாத்தாள் கசிவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவ்வப்போது வினாத்தாள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநில சட்டமன்றத்தில் வினாத்தாளை கசிய விடுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி அபராதம் விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. போட்டி தேர்வு மற்றும் அரசு பணியாளர் தேர்வுகளுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 நீட் வினாத்தாள் கசிவு பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ள நிலையில் மற்ற மாநிலத்திலும் இதேபோல் மசோதா நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments