Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலியின் காதலி யார்? ; தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி : புதிய சர்ச்சை

விராட் கோலியின் காதலி யார்? ; தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி : புதிய சர்ச்சை

Advertiesment
Virat kohli
, திங்கள், 17 அக்டோபர் 2016 (20:54 IST)
பள்ளி மாணவர்கள் எழுதும் தேர்வில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலி யார் என்று கேள்வி இடம் பெற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 

 
மும்பை நகரில் பிவாண்டி எனும் பகுதியில் சாச்சா நேரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அதில் போன வாரம் 9வது படிக்கும் மாணவிகளுக்கு ஒரு இந்தி தேர்வு நடந்தது.
 
தேர்வின் போது, ஒவ்வொரு கேள்வியாக பதிலளித்துக் கொண்டே வந்த மாணவிகள், ஒரு கேள்வியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேள்வி இதுதான் : விராட் கோலியின் காதலி யார்?. அதற்கு மூன்று பதில்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
 
1. பிரியங்கா சோப்ரா 2. அனுஷ்கா சர்மா 3. தீபிகா படுகோனே என்ற கொடுக்கப்பட்டிருந்தது.
 
விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாகவுக்கும் இடையே காதல் உள்ளது வெகு நாட்களாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டு வருகிறது. அதன்பின் அந்த காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், பொது இடங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். எனவே அவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு என்று யாருக்கும் தெரியாது. 
 
அப்படியே தெரிந்தாலும், ஒரு கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை, பள்ளி மாணிவிகள் தேர்வு எழுதும் வினாத்தாள்களில் இடம் பெற செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விவகாரம் வெளியானதும் இது பற்றி சாச்சா நேரு உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.ஆர். பாண்டே கருத்து தெரிவித்தார். வினாத்தாளை தயாரித்த ஆசிரியர் செய்த தவறு என்று அவர் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேசில் சிறையில் கலவரம் : 25 பேர் பலி