Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இழப்பீடு எல்லாம் தேவையில்ல..அந்த அயோக்கியன தூக்குல போடுங்க - கதறும் 8 வயது சிறுமியின் பெற்றோர்

Advertiesment
இழப்பீடு எல்லாம் தேவையில்ல..அந்த அயோக்கியன தூக்குல போடுங்க - கதறும் 8 வயது சிறுமியின் பெற்றோர்
, திங்கள், 2 ஜூலை 2018 (09:53 IST)
மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், இழப்பீடு எல்லாம் தேவையில்லை, குற்றவாளியை தூக்கில் போடுங்கள் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தன் வீட்டினருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ந் தேதி வழக்கம்போல் சிறுமி பள்ளிக்கு சென்றாள். பள்ளி முடிந்ததும், வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இர்ஃபான் சென்ற 20 வயது மனித மிருகம், சிறுமியை கடத்திச் சென்று முட்புதரினுள் வைத்து சீர்ரழித்துள்ளான். அத்தோடு நிறுத்தாமல் சிறுமியின் கழுத்தை பிளேடால் அறுத்துச் சென்றுள்ளான்.
 
வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பயந்துபோன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுமியை தேடிய போலீஸார், அவரை ஒரு முட்புதரினுள் மயங்கிய நிலையில் மீட்டெடுத்தனர். சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இர்ஃபானை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிறுமியின் பெற்றோர் எங்களுக்கு இழப்பீடு எல்லாம் தேவை இல்லை. எங்கள் குழந்தையை சீரழித்த அயோக்கியனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் நடைபெறாது என தெரிவித்தனர்.
webdunia
இதுகுறித்து பேசிய இர்ஃபானின் தந்தை என் மகன் குற்றம் செய்திருக்கும் பட்சத்தில் அவனை தாராளமாக தூக்கிலிடுங்கள், ஏனென்றால் எனக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறது, எனக்கும் அந்த வலி தெரியும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவி பார்க்க சென்ற சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு மக்கள் கொடுத்த அமோக தண்டனை