மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க மாணவர்கள் போராட்டம்
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க வேண்டும் என பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமீபத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்து வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகளுக்கு வகுப்புகளில் படித்து வந்தனர்
ஒரு சில மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாபிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் மற்றும் கால்சா கல்லூரி ஆகியவைகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே இருந்ததால் திடீரென மூடப்பட்டன
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரி முன் திரண்டு மீண்டும் கல்லூரியை திறக்கும்படி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர்களை அவர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது