விவசாயிகள் போராட்டம் எதிரொலி; பஞ்சாபில் முன்னிலை பெறும் காங்கிரஸ்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (12:43 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாத காலமாக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவுகள் எட்டாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் பல இடங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகவே தேர்தலில் பாஜக வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments