உலகளாவிய ஊழல் கட்சின்னா அது திமுகதான்! – ஓபிஎஸ் ட்வீட்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (12:27 IST)
உலகளாவிய ஊழல் கட்சி திமுக என்றும், அதனால்தான் மக்கள் திமுகவிற்கு ஆட்சி அதிகாரத்தை அளிக்கவில்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “பஞ்ச பூதத்திலும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என தொடர்ந்து மக்கள் உடைமைகளை பறிக்கும் கட்சி திமுகதான். ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வரும்போது ஒவ்விரு ஊழலில் சிக்குவார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் “எம்ஜிஆர் பட்டியலிட்ட ஊழல் புகார்களால் 13 ஆண்டுகள், அலைக்கற்றை ஊழலால் 10 ஆண்டுகள் என 23 ஆண்டுகளாக மக்கள் திமுகவிற்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காமல் தண்டித்துள்ளனர். இனியும் தண்டிப்பார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments