Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்துவுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி விலகல்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (20:39 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர் ரசியா சுல்தானா என்பவர் ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா என்பவரும் பதவி விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் திடீரென சித்து உள்பட மூவர் அடுத்தடுத்து பதவி விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments