ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரபல பாடகர் டிரேக் ஸ்கார்பியன் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்ற 'கிகி' பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற காமெடி நடிகர் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
கிகி சேலஞ்ச் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்பதால், கிகி சேலஞ்சில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் விராரை சேர்ந்த 3 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களுக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியது. அந்த இளைஞர்கள் 3 நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யவேண்டும் என்றும் ஓடும் ரயிலில் சாகசங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை பலர் பாராட்டி வருகின்றனர்.