Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

Advertiesment
புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

Siva

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (18:05 IST)
புல்வாமா தாக்குதல் குற்றவாளி திடீரென சிறையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பிரதான குற்றவாளியாகக் கருதப்பட்ட பிலால் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரான பிலால் உயிரிழந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!