Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர் அறிவிப்பால் பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (21:14 IST)
திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது சபாநாயகராக உள்ள வைத்திலிங்கம், புதுவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்துள்ள வைத்திலிங்கம் இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கொடுத்தார். துணை சபாநாயகரும் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
புதுச்சேரி தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இந்த தொகுதியில் ரங்கசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே முன்னாள் முதல்வர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments