இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவுக்கான புதிய கேமை பப்ஜி நிறுவனம் நாளை வெளியிடுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களால் அதிகம் விளையாடப்படும் கேமாக இருந்த பப்ஜி இரண்டு மாதங்கள் முன்னதாக தடை செய்யப்பட்டது. எனினும் பைரேட்டட் தளங்கள் மூலமாக சிலர் பப்ஜியை தரவிறக்கி விளையாடி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக எந்த வகையிலும் பப்ஜி விளையாட இயலாத தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கேம் மார்க்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இந்தியாவிற்கென பிரத்யேகமான கேம் செயலியை பப்ஜி நிறுவனம் உருவாகி வந்தது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா எனப்படும் இந்த கேம் செயலி நாளை இந்தியாவில் வெளியாகிறது. புதிய செயலியில் ஓடிபி உள்ளிட்ட வசதிகளுடன், சில கட்டுப்பாடுகளும் இருக்கும் என கூறப்படுகிறது.