காய்கறி வியாபாரம் செய்யும் உடற்கல்வி ஆசிரியர்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலைமை மிகுந்த திண்டாட்டத்தில் உள்ளது
நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலை இன்றி வருமானமின்றி பசியால் வாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் சரிவர வராததால் அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற பல்வேறு தொழில்களை செய்யக் கிளம்பி விட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
டெல்லியில் உள்ள ஒரு ஆசிரியர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருவது குறித்த செய்தி புகைப்படத்துடன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பையில் ஊரடங்கால் பணியிலிருந்து நீக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மும்பையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பிரசாத் போஸ்லே என்பவர் பணி செய்து வந்தார். இவர் தனது சம்பளத்தை பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது